Saturday 4th of May 2024 10:11:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்கா -மெக்சிகோ எல்லையில் போதைப்பொருள்  கடத்தல்காரர்களின் பாரிய சுரங்கப்பாதையை கண்டறிவு!

அமெரிக்கா -மெக்சிகோ எல்லையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பாரிய சுரங்கப்பாதையை கண்டறிவு!


அமெரிக்கா -மெக்சிகோ எல்லையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பாரிய நிலக்கீழ் சுரங்கப்பாதையை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரயில் பாதை, மின்சார வசதி மற்றும் சீரான காற்றோட்ட அமைப்பு ஆகியன உள்ளடங்கலாக மிகவும் நவீனமான முறையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு பேரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். கொக்கெய்ன் (cocaine), ஹெராயின் (heroin) மற்றும் மெத்தம்பேட்டமைன் (methamphetamine) போன்றவற்றை விநியோகிக்க சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வலுவான சுவர்களுடன் 1,750 அடி ( 530 M) மீற்றர் வரை நீளமானதான இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சுரங்கப் பாதையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து நேற்றே அறிவிக்கப்பட்டது என பாஜா கலிபோர்னியாவிற்கான சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1993 முதல், இதே பகுதியில் சுமார் 100 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகளவானவை மார்ச் - 2020 இல் கண்றியப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்கா -மெக்சிகோ எல்லையில் தற்போது கண்டறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சுரங்கப்பாதை பிராந்தியத்தில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப்பெரியது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE